திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எச்.ராஜா கட்டிப்போட்டு வளர்க்கும் காங்கேயம் காளை! அவரே வெளியிட்ட புகைப்படம்!
எச். ராஜா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள மெலட்டூரில் பிறந்தவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காரைக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார்.
சமூக தளங்கள் மற்றும் தமிழக, இந்திய அரசியலில் அடிக்கடி தனது பரபரப்பான அறிக்கையை விடுபவர் எச். ராஜா. 1989 ஆம் ஆண்டு முதல் அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நான் தோட்டத்தில் கட்டிப்போட்டு வளர்க்கும் காங்கேயம் காளை. pic.twitter.com/KUGfMLQKl1
— H Raja (@HRajaBJP) August 21, 2020
இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. பாரம்பரியத்தை மதிக்கும் இவருக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அதிகம் ஆர்வம் உண்டு. இவர் தனது பள்ளிப்படிப்பை அழகப்பா பள்ளியில் படித்திருக்கிறார். வணிகவியல் படித்த எச். ராஜாவுக்கு விவசாயத்திலும் பெரும் ஆர்வம் உண்டு. இவர் காளைகளும் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அவர் வளர்த்துவரும் காங்கேயம் காளை புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.