திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கமல்ஹாசன் ஒரு முட்டாள்..! மு.க.ஸ்டாலினையும் விட்டுவைக்கவில்லை.!எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!!
பாஜக பிரமுகர் H.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசன் உலக நாயகனாக சினிமாவில் இருந்தாலும் முட்டாள் தான் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், காரைக்குடி தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான H.ராஜா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலிவு விலை மக்கள் மருந்தகம் ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ஆனால் பற்றாக்குறை இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஸ்டாலின் முட்டாள் என அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள். நடிப்பு மட்டுமே கமலஹாசனுக்கு தெரியும். முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் கமலஹாசனுக்கு பயம். பின்னர் எப்படி அவர் உலக நாயகனாக மாறுவார் என தெரிவித்துள்ளார். H.ராஜாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.