திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுக-விற்கு ஓட்டு போடுவார்களா.?" சர்ச்சையை கிளப்பிய நடிகை குஷ்புவின் பேட்டி.!
நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கி வரும் 1,000 ரூபாய் உரிமை தொகையை பிச்சை எனக் கூறிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் போதை பொருள் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டதிலிருந்து போதைப் பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கும்பலுக்கு தலைவராக செயல்பட்ட திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போதை பொருள்கள் கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்குன்றத்தில் போதை பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் செயற்குழு உறுப்பினர் குஷ்பூவும் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் போதைப் பொருள்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை என கூறினார். மேலும் திமுக அரசு தாய்மார்களின் பிரச்சனையை கவனிக்க தவறியதாகவும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்களா.? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசு சார்பாக குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவி தொகையை பிச்சை என குஷ்பூ விமர்சித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.