"மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும்தான் சமூக நீதியா.?.." திமுக அரசுக்கு பா ரஞ்சித் கேள்வி.!!



social-justice-is-for-vote-director-pa-ranjith-question

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது உடல் அடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில் மாநிலத்தில் ஆளும் திமுக அரசின் சமூக நீதி குறித்து தனது கேள்விகளை முன் வைத்திருக்கிறார் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 6 நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தலைநகர் சென்னை முழுவதும் பெரிதும் பதட்டம் நிலவியது. ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவரது உடல் அடக்கம் பொத்தூரில் நடைபெற்றது.

தலித் மக்கள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து பா.ரஞ்சித் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பேசிய பா.ரஞ்சித் தலித் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்வியை முன் வைத்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அவரை கொலை செய்தவர்கள் யார்.? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்.? என்பது குறித்து காவல்துறை விசாரணை செய்யாமல் கைதானவர்களின் வாக்குமூலத்தையே காவல்துறை பிரதிபலிக்கிறது. மேலும் கடந்த சில மாதங்களாக தலித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி வருகிறது. திமுக அரசு தலித் மக்களின் பாதுகாப்பை எப்போது உறுதி செய்யப் போகிறது.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: தர்மயுத்தம்: "எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம்.." ஓபிஎஸ் கண்டன அறிக்கை.!

வாக்கிற்கு மட்டும் சமூக நீதியா.?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் திமுக கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கை ஒரு ரவுடி போலவும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் போலவும் கருத்துக்களை முன்வைத்து பதிவுகள் இடுகின்றனர். ஒரு படுகொலை நடந்ததன் அதிர்ச்சி அடங்கும் முன்பே இது போன்ற கருத்து உருவாக்கங்களை முன்வைத்து பரப்புவதன் அவசியம் என்ன.? என்று கேட்டார். மேலும் திமுக அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனது வாக்கை செலுத்தி இருக்கிறேன். மக்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே திமுக அரசு சமூக நீதியை பற்றி பேசுகிறதா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

இதையும் படிங்க: "திமுகவின் பி டீம் தான் அதிமுக..." பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!