திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தர்மயுத்தம்: "எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம்.." ஓபிஎஸ் கண்டன அறிக்கை.!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம் என கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து விலகுவதை கட்சியின் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து அனைவரும் ஆதரவுடன் இபிஎஸ் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்களுடன் இணைந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ்.
தர்மயுத்தம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக கட்சியை அநியாயகாரர்களிடமிருந்து மீட்பதாக கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். மேலும் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அதிமுக மீட்புக் குழு என்ற பெயரில் இயங்கி வருகிறார் ஓபிஎஸ். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க: "திமுகவின் பி டீம் தான் அதிமுக..." பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!
பொய் என்றும் உண்மையாகாது
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஓபிஎஸ். அந்த அறிக்கையில் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகாது என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் துரோகம் இழைத்ததாக குறிப்பிட்டுள்ள பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது என விமர்சித்து இருக்கிறார். ஓபிஎஸ் புதிய அறிக்கையை தொடர்ந்து மீண்டும் தர்மயுத்தம் ஆரம்பமாகிவிட்டதா.? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "பட்டப் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.." நீட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.!!