மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video : சொந்த கட்சி வேட்பாளரை பங்கமாக விமர்சித்த நடிகை கங்கனா.! வைரல் வீடியோ.!
நடிகை ரங்கனா ரனாவத் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவை விமர்சிக்க எண்ணி தன்னுடைய சொந்தக் கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை படுமோசமாக விமர்சித்து இருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்ற வருகின்றது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி பாராளுமன்ற தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த தேர்தல் பேச்சுக்கள் ஆரம்பித்த நாளில் இருந்தே சர்ச்சைகளில் அவ்வபோது கங்கனரானவத் சிக்கிக் கொண்டு வருகிறார்.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவரது அரைகுறை உடை புகைப்படங்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான சுப்ரியா வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, கங்கணா ரணாவத் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது அந்த பேட்டியில் இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் என்று தவறுதலாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.
அந்த வகையில் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கங்கனா ரணாவத் தான் பேசியபோது ஆர் ஜே டி தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சனம் செய்ய பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை படுமோசமாக விமர்சித்து இருக்கிறார். தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் நிலையில் கங்கனாவின் இந்த பிரச்சாரம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kangana Ranaut trashed her own party's Tejasvi Surya for eating fish during navratri.
— Dr Ranjan (@AAPforNewIndia) May 4, 2024
Shame. Shame.pic.twitter.com/DOtAaR5sqc
அவரது அந்த பிரச்சாரத்தில், "இந்த நாட்டின் மொழியும் கலாச்சாரமும் புரியாதவர்கள் இந்த நாட்டை எப்படி வழி நடத்த முடியும்.? நிலாவில் உருளைக்கிழங்கை விளைவிக்க விரும்பும் ராகுல் காந்தியும் சரி, ராமநவமியில் மீன் சாப்பிட்ட தேஜஸ்வி சூர்யாவும் சரி வினோதமாக பேசி திரிகின்ற அகிலேஷ் யாதவும் சரி, இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா.?" என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ் ராம நவமியின் போது ஹெலிகாப்டரில் மீன் சாப்பிடுகிற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை தான் கங்கனா ரனாவத் குறிப்பிட்டு பேசுகிறார். ஆனால், அவர் தேஜஸ்வி யாதவ் என்று விமர்சிப்பதற்கு பதில் தான் சொந்த கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்து இருப்பது தான் சர்ச்சையாகியுள்ளது.