#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விவசாயியிடம் தக்காளிகளை திருடி, ரூ.1.5 இலட்சம் வருமானம் பார்த்த தமிழக தம்பதி கைது; கர்நாடகாவில் பகீர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த விவசாயி மகேஷ். இவர் தனது விளை நிலத்தில் விளைவிக்கப்பட்டிருந்த தக்காளியை, கோலார் சந்தையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, இவரின் வாகனத்தை இடைமறித்த மர்ம கும்பல் மகேஷை தக்காளியை திருடி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் சிந்துஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதாவது, தக்காளியின் விலை ஏற்றத்தை கருத்தில்கொண்டு, விவசாயியை தாக்கி தக்காளிகளை பறித்து சந்தையில் ரூ.1.5 இலட்சம் பணம் சம்பாத்தியம் செய்தது அம்பலமானது.