திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது!!.. உதயநிதி ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி பேச்சு..!!
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுகவினர் கூறி வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசும் இதற்கு ஆதரவு தெரிவித்நுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இவ்வாறு கூறியுள்ளார்:-
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகலாம். கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தாராளமாக அமைச்சராகலாம். உதயநிதி ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். அமைச்சர் ஆவதற்கான முழுத்தகுதியும் அவருக்கு உள்ளது. ஆனால் அமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலின் விரும்பவேண்டும். கட்சியினர் விரும்பம் தெரிவித்துள்ளனர். இனி உதயநிதி ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.