மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இளம் பெரியார் உதயநிதி" கே. எஸ். அழகிரி புகழாரம்!!
சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதனத்தை எதிர்க்க கூடாது, ஒழிக்க வேண்டும் என்று சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்க்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்புகள் வந்ததது.
குறிப்பாக பாஜக மற்றும் ஆர் எஸ்.எஸ் அமைப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உதயநிதி கூறியது தவறு என்று வாதம் எழுந்தது. இருப்பினும் தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை அதை தான் திரும்ப திரும்ப கூறுவேன் என்று மொழிந்தார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி கூறியபோது, "100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னதைத்தான் உதயநிதி இப்போது சொல்லியிருக்கிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. உதயநிதியை இளம் பெரியார் என்று சொல்லலாம்" என்று கூறியுள்ளார்.