திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா.? கடுப்பான நடிகை குஷ்பூ.!
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து நடிகை குஷ்பூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்று அம்பேத்கர் - மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை?, எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.