மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking || திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!
உடல்நலக்குறைவால் திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி என தகவல்.
மா. சுப்ரமணியம் ஒரு தமிழக அரசியலரும், அமைச்சரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார்.
மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிண்டி தொழிற்குடியிருப்பில் வாழும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 1999 இல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துள்ளார்.
இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு இதன் காரணமாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மயங்கி விழுந்த மா.சுப்பிரமணியனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.