உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் நாங்க பயப்படுவோமா?.. உதயநிதி ராசி அனைத்தும் நடந்தது - செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி.!



Madurai AIADMK former Minister Sellur K Raju Pressmeet

உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசியால் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. நாங்கள் எந்த ரைடுக்கும் அஞ்சமாட்டோம் என முன்னாள் அமைச்சர் பேசினார். 

மதுரை மாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "அதிமுக அரசு மக்களுக்கு கொண்டு வந்த மினி கிளினிக் திட்டம், திமுகவினரால் முடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பதிலே மக்களை தேடி மருத்துவம் என திமுகவால் அறிவிக்கப்பட்டது. எந்த மருத்துவரும் வீடுதேடி வரவில்லை. 

மின் கட்டணம் உயராது என வாக்குறுதி அளித்த திமுக மின்கட்டணத்தை உயர்த்திவிட்டது. நின்றாள் வரி, நடந்தால் வரி என ஒவ்வொன்றுக்கும் வரி போடப்படுகிறது. திமுக ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். 

madurai

திமுகவில் உள்ள அமைச்சர்களான பொன்முடி, வேலு ஆகியோர்கள் யார் என எங்களுக்கு தெரியும். ரெய்டு விட்டு வழக்கு போட்டால் பயம் கொள்வார்கள் என நினைக்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். கலைஞரின் காலத்திலேயே வந்த உருட்டல், மிரட்டலை பார்த்தவர்கள். இதற்கு பயம் கொள்ளமாட்டோம். 

கையெழுத்தில் நீட் ரத்து என கூறி மக்களை இன்னும் ஏமாற்றும் அரசு திமுக அரசு தான். உதயநிதி ஸ்டாலின் செங்கலை என்று தூக்கி காண்பித்தாரோ, அன்று முதல் செங்கல் விலையும் உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியால் செங்கல், ஜல்லி உட்பட கட்டுமான பொருட்களின் விலை கூடிவிட்டது" என்று தெரிவித்தார்.