மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#மயிலாடுதுறை : தேமுதிக விழாவில் நிர்வாகிகள், நடனமாடி உற்சாகம்.. வைரலாகும் வீடியோ.!
கடந்த 25 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர், 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார். அக்கால கட்டத்தில் அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.
அதன் பின் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து சரிவை சந்தித்தார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் 71 வது பிறந்தநாளை தேமுதிக கட்சியினர் தலைமை அலுவலகத்தில் கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேடையில் குத்தாட்டம் போட்ட தேமுதிக கட்சியினர்.....!#dmdk #mayiladuthurai pic.twitter.com/b0msfSx1Zu
— JAGANNATHAN (@Jaganathan_JPM) September 15, 2023
நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிகவின் 19 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட செயலர் ஜலபதியின் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பல வழங்கப்பட்டது. கடைசியாக விஜயகாந்தின் திரைப்பட பாடல் ஒன்று மேடையில் ஒலிக்க ஆரம்பித்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.