மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் எப்போதும் எங்களுக்கு அன்புள்ள அண்ணன்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமலே நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நடிகர் விஜய்யை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன். அன்பாக பேசக்கூடியவர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல் நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கொள்கைகள் என்றே வரும் போது தான் அவருடைய கட்சியின் நோக்கம் தெரியவரும் என கூறியுள்ளார்.