பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"என்னதான் நடக்கும் நடக்கட்டும்" ரைடு குறித்து அமைச்சர் துரைமுருகன் கூல் ரிப்ளை.!!
நேற்று அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தீவிரமாக ரைட் நடத்தி வந்தது. பின்னர், அவரை விசாரணைக்காக அவரது காரிலே அழைத்து சென்றனர். இதுகுறித்து நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் திமுக எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை என்ற பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்று பாடலை பாடி அவரது பாணியில் கருத்தை தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.அப்பொழுது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார்.
இந்த நிலையில், அங்கிருந்து புறப்படுகையில் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் சார்பு நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை தற்போது ரைடு நடத்தி வருகிறது.
இது குறித்து தங்களது கருத்து என்ற கேட்டதற்கு அவர் அப்படியா? உண்மையிலேயே எனக்கு தெரியாது! என்று கூறியிருந்தார். மேலும் தற்போது நடந்து வரும் ரைட் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' பார்த்துக் கொள்ளலாம் என்று பாடியபடியே அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.