மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முந்தைய ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை! அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!!
சரியான திட்டமிடல் இல்லாமல், முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்:-
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக, ₹17 கோடி மதிப்பில் புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை என்பதால், வடிகால் அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், முந்தைய ஆட்சி காலகட்டத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.