மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்காக களமிறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! குவியும் பாராட்டு!!
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், அவரது துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறிவருகிறார்கள். அவர் வெளியிட்டிருந்த பதில்,
"மணிப்பூரில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட நம் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்கள்.
நம் முதலமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள் - 5 வீராங்கனைகள் - 2 பயிற்சியாளர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்தனர்.
அதன்பேரில், மணிப்பூர் வீரர் - வீராங்கனையரை விமானத்தில் சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ளவுள்ள மணிப்பூர் வீரர் - வீராங்கனைகளுக்கு என் வாழ்த்துகள்." என்று அதில் அவர் பதிவிட்டிருந்தார்.