பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பல எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடங்குகிறது...!



Monsoon Session of Parliament begins today with many expectations.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடைகிறது. 

இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அக்னிபத் மற்றும் மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்‌ பல விவகாரம் குறித்து விவாதம் அனல் பறக்கும் என தெரிகிறது.