கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#LokSabha | "வளரும் இந்தியா வளர்ந்த இந்தியாவாக மாற மோடி வேண்டும்" - அண்ணாமலை வேண்டுகோள்.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் புதன் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்த அவர் அப்பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பரப்புரையின் போது மக்களிடம் பேசிய அண்ணாமலை இந்தியாவில் வளர்ச்சிக்கு மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று தெரிவித்தார்.
70 ஆண்டுகளாக பின்னோக்கி சென்ற இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்சசி பெற்றதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆளும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறார்கள் எனக் கூறிய அண்ணாமலை பாஜக நிர்ணயித்துள்ள நான் இருக்கும் அதிகமான எம்பிக்களை அவர்களுக்கு வழங்க மக்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார். இனி வர இருக்கின்ற ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது என அண்ணாமலை கூறினார்.
வளரும் இந்தியா வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற மீண்டும் மோடி வேண்டும் என தெரிவித்தார். பல ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத பல முடிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறினார். எனவே மக்கள் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.