மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பா.ஜ.க-வின் அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆகிறாரா அமித்ஷா?: காங்கிரஸ் கிண்டல்!.
பா.ஜ.க தனது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டதா என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காரணம் அசாம் முதல்வர் ஷிமந்தா பிஸ்வா சர்மா தவறுதலாக அமித்ஷாவை பிரதமர் என்று அழைத்ததை காரணம் காட்டி இந்த விமர்சனத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசாம் மாநில முதல்வர் ஷிமந்தா பிஸ்வா சர்மா கவனக்குறைவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய உள்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக பிரதமர் அமித்ஷா என்று அழைத்தார். ஷிமந்தா பிஸ்வா சர்மா கவனக்குறைவாக பேசியதை காங்கிரஸ் கட்சி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் இதை கவனக்குறைவாக செய்தாரா?, அல்லது பா.ஜ.க தனது அடுத்த பிரதமரை முடிவு செய்து விட்டதா? அல்லது நரேந்திரமோடிக்கு பதிலாக அமிர்தாவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டதா? என்றும், அசாம் முதல்வர் பேசியது கவனக்குறைவாலோ அல்லது தவறுதலாகவோ நடந்ததாக தெரியவில்லை என்று காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.