"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#Breaking: பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் நியமனம்; பாமக தலைமை அறிவிப்பு.!
பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே மணியின் மகன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி இராமதாசு எம்.பி., அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே.எம் தமிழ் குமரனுக்கு மருத்துவர் இராமதாசு நேரில் நியமன கடிதத்தை வழங்கினார். ஜி.கே.எம் மணி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.