மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாவர்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே இடையே மோதல்: கூட்டணியில் பிளவா?!!..
சாவர்க்கர் மீதான ராகுல்காந்தியின் கருத்து காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் இடையே கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதிக்கு வந்த அவர், அங்குள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அந்த உரையில், அந்தமான் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேய அரசாங்கத்திடம் சாவர்க்கர் தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். மேலும் அவர் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் ஆங்கிலேயே படையில் பணியாற்றினார், அதற்காக ஆங்கிலேய அரசாங்கத்திடம் பென்ஷனும் பெற்றார் என்று பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், ராகுல் காந்தி எனது தாத்தாவான சாவர்க்கர் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அவதூறாக பேசி வருகிறார். எனது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர சாவர்க்கரை அவமதித்து வருகிறது. ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி என்ற பெயர் உள்ளவர்கள் என்று தொடங்கி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் ராகுல் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சாவர்கார் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு பேசுவதால் எதிர்க்கட்சிகளின் அணியில் பிளவை ஏற்படுத்தும் எனவும் உத்தவ் தாக்கரே எச்சரித்தார்.
சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், சாவர்க்கர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டி அதனை நிரூபிக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். அரசியலுக்காக, தேசப் பற்றாளர்களின் பெயர்களை அவமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல. என்று பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சாவர்க்கர் மீதான ராகுல்காந்தியின் கருத்து காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் இடையே கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.