மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்த சசிகலா.! டிடிவி தினகரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி.!
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, நேற்று காலை கார் மூலம் சசிகலா சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் 23 மணி நேர பயணத்திற்கு பின்னர் சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை வந்த சசிகலாவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் விசாரித்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தியாகத் தலைவிக்கு வாஞ்சைமிகு வரவேற்பளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி. வரும் சட்டமன்ற தேர்தல் ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் உள்ள எதாவது ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அதிரடியாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.