#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவலைப்படாதீங்க.. கட்சியை சரி செய்ய நிச்சயம் வருகிறேன்.! சசிகலா பரபரப்பு ஆடியோ.! அ.ம.மு.க-வினர் உற்சாகம்.!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனாலும், டிடிவி தினகரனின் அ.ம.மு.க தனித்து போட்டியிட்டு அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த ஆடியோவில், ஹலோ லாரன்ஸ் நல்லா இருக்கிறீர்களா, வீட்டில் எல்லாம் நல்லா இருக்கிறார்களா.. என, நலம் விசாரிக்கிறார். பின்னர், நான் சீக்கிரம் வந்து விடுவேன்.. கவலைப்படாதீங்க. கண்டிப்பாக கட்சியை சரி செய்து விடலாம். எல்லாரும் தைரியமாக இருங்க. கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். நிலைமை மோசமாக இருக்கு எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்க. நிச்சயம் வந்துவிடுவேன் என கூறுகிறார். இந்த ஆடியோ வைரலான நிலையில், அ.ம.மு.க-வினர் உற்சாகம் அடைத்துள்ளனர்.