மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியலமைப்பு சட்டப்படியே நடராஜர் கோவிலில் ஆய்வு நடந்தது -அமைச்சர் சேகர் பாபு தகவல்..! சூட்சமம் என்ன?..!!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு நடப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாள் ஆய்வை அறநிலைத்துறை விசாரணை குழு இன்று காலை தொடங்கியது. கோயில் நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு பற்றி ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று கணக்கு கேட்க கோயிலுக்குள் சென்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் பத்து காவலர்கள் கோவிலுக்குள் சென்று விசாரணையை தொடங்கினர்.கடலூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர்.
தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக கணக்கு விவரங்களை தர மறுத்து விட்டனர். கோயிலில் ஆய்வு நடத்த சட்ட ரீதியாக செயல்படவில்லை என தீட்சதர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோயிலில் 2009 இல் நடந்த கணக்குத் தணிக்கைகே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் கூறியுள்ளனர். தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்துள்ள நிலையில் அறநிலைத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உரிய சட்டத்தின் படியே அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் அனைவருக்கும் பொதுவான கோயில் என்பது தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
அதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் ஒத்துழைப்பதுதான் மனு நீதி என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். கோயிலில் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு இவ்வாறு கூறியுள்ளார்.