மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக, தமிழ்நாட்டின் வீரர் தேர்வு..! முதலமைச்சர் வாழ்த்து..!!
ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக, தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வ பிரபு திருமாறன் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன்.
#AsianAthleticsAssociation-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும். என்று பதிவிட்டுள்ளார்.
மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்! https://t.co/2J7iSQ8ZDv
— M.K.Stalin (@mkstalin) July 5, 2023