மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்.. ஷாக்.... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வந்த சோதனை.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு, இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.