மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கேட்பது என்ற அடிப்படை கூட ப.சிதம்பரத்துக்கு தெரியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்..!
புகார் வழக்கில் எப்.ஐ.ஆர் கேட்பது முட்டாள்தனமானது என்று ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி கொடுத்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் எப்.ஐ.ஆர் நகல் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி-யான ப.சிதம்பரத்திற்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, புகார் வழக்கில் எப்.ஐ.ஆர் கேட்பது முட்டாள்தனமானது. ப.சிதம்பரத்தின் சட்டம் தொடர்பான பட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் இன்று தொடர்ந்து 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணை நடைபெறுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம் கூறுகையில், அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது கிடையாது. என்ன குற்றம் நடந்தது என நாங்கள் கேட்கிறோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. எந்த போலீஸ் அமைப்பு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. எப்.ஐ.ஆர் நகலை கொடுங்கள் என்றால் இதற்கும் பதில் இல்லை என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க மூத்த தலைவரும், நேஷனல் ஹெரால்டு ஊழல் குறித்த வழக்கினை தொடர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:-
இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமானது. இது ஒரு புகார் வழக்கு. ப.சிதம்பரத்தின் சட்டம் தொடர்பான பட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 12 மற்றும் 15வது அத்தியாயம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் ப.சிதம்பரத்திற்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.