திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசியலில் ஆழமாக தடம் பதிக்க ரஜினியின் அதிரடி முடிவு; தொண்டர்கள் உற்சாகம்.!
ரஜினிகாந்த் புதிய டி.வி சேனல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரை பல ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை எந்த மூடி முடிவையும் சொல்லாத ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த மாதத்துடன் ஒரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தற்போது புதிய டிவி சேனலை துவங்க முடிவெடுத்துள்ளார்.
அவரால் தொடங்கப்பட்ட மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் இதுதொடர்பாக உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற மூன்று பெயர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த தடையில்லா சான்றிதல் கோரும் விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் டிவி தொடங்க தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கையெழுத்திட்டுள்ளார். இதனால் புதிய டிவி சேனல் தொடங்க முடிவு உறுதியாகியுள்ளது.