மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING : போட்டியின்றி வெற்றிபெற்ற பாஜக.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிவதற்கு முன்பாகவே, பாஜகவிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரத் தொகுதி தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாஜகவிற்கு அளித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரான நிலேஷ் அம்பானியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்பு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் பி எஸ் பி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 8 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாஜகவின் சூரத் தொகுதி வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்த 5 நபர்களில் 3 பேர் பின்வாங்கியுள்ளனர். இதையடுத்து, அவர், தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். மற்ற வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் போட்டியின்றி பாஜகவின் வேட்பாளரான முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.