மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சிவசேனா கட்சியின் மூத்ததலைவர் சுதிர்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..! கொந்தளிப்பில் தொண்டர்கள்..!!
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரத்தில் கோவில் சாமி சிலைகள் குப்பையில் வீசப்பட்டது. இந்த விஷயத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா கட்சி போராட்டம் அறிவித்த நிலையில், அக்கட்சியின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.
அப்போது காவல்துறை அதிகாரிகளோடு சுதிர் சூரி பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தவே, சுதிர் சூரி படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சிவசேனா கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் கொந்தளிப்பில் உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.