#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தான்" - அண்ணாமலையின் பதிலை விமர்சித்த எஸ்.வி சேகர்.. பாஜக வட்டாரத்தில் சலசலப்பு.!
லட்சம் ரூபாயில் அடுத்தவனின் காசு வாழ்பவனை விட, தலைமைக்கு தகுதியானவன் தன்மானம் உடையவனே என எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.
நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் வைத்துள்ள சொத்து விபரங்கள் குறித்த தகவலை சேகரித்து ஒன்றரை லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அப்போது பேசிய அவர், எனது வீட்டின் வாடகை உட்பட பல செலவுகளை எனது நண்பர்களே கவனித்து வருகிறார்கள். என்னிடம் எந்த பணமும் இல்லை என்பது தொடர்பாக பேசியிருந்தார். இந்த நிலையில் இதனை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகி மறைமுக பதிவால் தாக்கியுள்ளார்.
அந்த பதிவில், "லட்சம் ரூபாயில் அடுத்தவனின் காசு வாழ்பவனை விட, ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவன் தான் மானஸ்தன். அவனே தலைமைக்கு தகுதியானவன்" என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே தலைமையின் மீது பல மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தற்போது அவர் பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.