திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருத்துவ கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநகராட்சி மேயர்..!
குஜராத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.னதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதன் வளாகத்தில், மருத்துவக் கல்லுாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆமதாபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ஹிதேஷ் பரோத், ”மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும்,” என்று அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு, ஆமதாபாதில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதையடுத்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.