மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்..!
பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் இது குறித்து விவாதிக்க கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட நான்கு எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் 6 போர், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 7 பேர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சார்பில் எம்.பி.கள் 3 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி. 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 20 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற வரலாற்றில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் சஸ்பெண்டு உத்தரவை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தியடிகள் சிலை முன்பு தரையில் அமர்ந்து நேற்று பகலில் இருந்து 50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு ஆகியவை பொதுமக்களை மிகவும் பாதிப்பதாகவும், எம்.பி.க்கள் மேற்கொண்டுள்ள அமைதியான சத்தியாகிரகம் வெற்றி பெறும், எனவும் திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்