மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பதவியா..? பணமா..? தினகரனை அலரவிடும் எம்எல்ஏக்கள்!
மதுரையில் தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இடை தேர்தல் வந்தாலும் எப்படி கையாள்வது என்பது தொடர்பாகவும் தேர்தல் செலவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
கடந்த ஒருவாரமாக மீடியாக்களை பிஸியாக்கி தமிழகத்தை பரபரப்பாக வைத்து இருந்தனர் தினகரன் தரப்பினர். தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் தீர்ப்பில் தினகரன் தரப்பு ஒருவிதமான ஆட்டம் கண்டுள்ளது எனலாம்.
ஏனெனில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதகமாக அமைந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தினகரன் தலைமையில் மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மேலும் இடைத்தேர்தல் வந்தாலும் எதிர் கொள்ளப் போவதாகவும் முடிவு எடுத்துள்ளார்கள்.
தேர்தலை சந்திக்க ஆகும் செலவழித்து செலவு குறித்து தினகரன் கருத்து கேட்கும் போது தலைமை செலவு செய்தால் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த தினகரன் சிறு புன்னகையை பரிசாக அளித்துள்ளார். தினகரனால் பதவியிழந்த எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் செலவு செய்ய தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.