திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நேர்மையான அரசியல் நடத்தும் யாரும் ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவர்களுடன் தொடர்பு வைக்கமாட்டார்கள்" அதிமுகவை சாடிய திருமாவளவன்!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்த அவர் பேசுகையில் நான் முதன் முதலில் கட்சி தொடங்கிய போது மற்ற கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தேன். மேலும் காவல்துறை பக்கத்தில் இருந்தும் நெருக்கடிகள் பல சந்தித்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் 2011 இல் மக்கள் நல கூட்டணி அமைத்தோம். தற்போதும் எந்த ஒரு பயமும் இல்லாமல் கட்சி நடத்தி வருகிறோம். அதிமுக மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது. இந்த கட்சி எத்தனை நாள் இயங்கப் போகிறது என்பதை நாமே தீர்மானித்து விடலாம்.
மேலும் நேர்மையான அரசியல் நடத்தும் யாரும் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகளுடன் எந்த தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.