திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. முதல்வர் - நிதியமைச்சர் திடீர் சந்திப்பு.!
முதல்வர் மு.க ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், அவரின் மகன் திமுக இளைஞரணி & தமிழ்நாடு விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று வெளியானது.
அந்த ஆடிவோ பதிவு உண்மையற்றது என பி.டி.ஆர் தரப்பில் கூறினாலும், அதனை வெளியிட்ட பாஜக தரப்பு முழு ஆடியோவே எங்களிடம் இருக்கிறது. இது சிறியது தான் என தெரிவித்தது. இதனால் திமுகவுக்குள் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இதனால் அமைச்சர் பழனிவேல் பதவிக்கு ஆபத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அவசர ஆலோசனையை நடத்தி வருகின்றனர். நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர்களில் சிலரின் பதவி நீக்கம், புதியவர்களுக்குக் வாய்ப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.