"சர்க்கரைக்கு பயந்து ஓடினேன்., இன்று தொடர்கதை"... மனம்திறந்து பேசிய அமைச்சர் - விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்.!



TN Minister Ma Subramanian Speech about Daily 12 KM Walking

 

எங்கு சென்றாலும் நான் ஓடுவதை நிறுத்துவது இல்லை, நாளொன்றுக்கு 10 கி.மீ ஓடினால் மட்டுமே உணவை எடுத்துக்கொள்ள எனக்கு பிடிக்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டி. நடராஜனுக்கு விருந்து வழங்கி கலந்துரையாடிய தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், "நான் நடராஜனை நேரடியாக தொலைபேசியில் பேசியுள்ளேன். அவரிடம் பேச வேண்டும் என ஆசைப்பட்டு நம்பர் வாங்கி பேசினேன். கிராமத்தில் இருந்து உயரத்திற்கு சென்றும், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் கிரிபிகேட்டை பயிற்றுவித்து கிராமத்திலேய பயிற்சி வழங்கும் நிகழ்வு மிங்க்பெரிய விஷயம். 

எனக்கு 67 வயது ஆகிறது. எனக்கு உடற்பரயிற்சிக்கு நேரம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. யாரும் 24 மணிநேரம் வேலை செய்யப்போவது இல்லை. 24 மணிநேரத்தில் 5 & 6 மணிநேரம் உறங்கினால் போதுமானது. காலை நமக்காக 2 மணிநேரம் எடுத்துக்கொள்வதில்லை தவறில்லை. இன்று காலை 16 கி.மீ ஓடினேன். 

tamilnadu

ஒவ்வொரு நாளும் நான் 10 கி.மீ ஓடினால் தான் எனக்கே சாப்பிட பிடிக்கும். திடீரென வெளியூர் பயணத்திற்கு புறப்படுகிறேன் என்றால், வழியில் 10 கிமீ காரில் இருந்து இறங்கி ஓடியபின் மீண்டும் காரில் ஏறி பயணம் செய்வேன். எங்கு சென்றாலும் ஓடுவதை நிறுத்துவது இல்லை. முதலில் சர்க்கரைக்கு பயந்து ஓட தொடங்கினேன், பின்னாளில் அதுவே பழகிவிட்டது. 

சர்க்கரை நோய்க்காக சர்க்கரை சாப்பிடலால் இருக்க வேண்டாம். உடற்பயிற்சி செய்தால் பிரச்சனை குறையலாம். கால்களில் இரத்த ஓட்டம் இருக்கும் வரை எனது ஓட்டம் தொடரும். வைகை செல்வனின் இலக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களை தாக்கி பேசினாலும், தாங்கி பேசினாலும் அவரின் தமிழ் எனக்கு பிடிக்கும்" என்று கூறினார். அமைச்சர் அவ்வப்போது நகையாக பேசியதை கேட்டு அரங்கமே வயிறுகுலுங்க சிரித்தது.