மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பால், அமமுக-வினர் அதிர்ச்சி!.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்களது கட்சியின் சின்னமாக குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்த நிலையில், டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்றும் அதற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்