தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை சந்திக்கப்போகும் முக்கிய புள்ளி.!



ttv meet vijayakanth

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து காட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில், அமமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

இந்தநிலையில், அமமுகவுடன் தேமுதிக கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது. அதன்படி தேமுதிக-விற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இதனையடுத்து தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன. இந்த முறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TTV

இந்நிலையில்,  அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தேர்தல் பிரசார திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.