மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.10.6 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வாரி வழங்கிய திராவிட மாடல் அரசு!!
இன்று ரூ.10.6 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திமுக வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்:-
"தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, தொழிலாளர் நலன், பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.10.6 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1,735 பயனாளிகளுக்கு இன்று வழங்கினோம்.
நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்." என்று அதில் தெரிவித்திருந்தார்.