மக்கள் பணியா.? அப்படினா? முழுநேரமும் சினிமா தான்..!
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் இந்த படத்திற்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். மாமன்னன் திரைப்படத்தின் கதைக்களத்தை பாராட்டிய அவர் மாரி செல்வராஜின் இயக்கம் மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் திறமை பற்றி மனதார பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளார். அதில், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
— Udhay (@Udhaystalin) July 3, 2023
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே… https://t.co/i3FAanRGca
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.
`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர்
வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி" என்று அதில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த மக்கள், 'அரசியல், மக்கள் பணி எதிலும் கவனம் செலுத்தாமல் முழுநேரமும் சினிமா தான் போல' மக்கள் பணி என்றால் என்ன என்று கேட்பார் போல் என்று சாடியுள்ளார்.
no sociall work , only cine duty? pity chepauk voters.
— J.Vishweshwaran 🇮🇳💪🏻💐 (@jvishi) July 3, 2023