தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி.!!
நடிகரும், தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தனது 71 வயதில் அவர் இயற்கை எய்தினார். அவரின் மரணத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில்,முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலைச்சர், "தமிழக மக்களால் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்தின் மரணம் பேரிழப்பாகும்.
திரை வாழ்க்கை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை அவர் பிடித்துள்ளார். அவரது உடலுக்கு அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்படும்" என கூறியுள்ளார்.