மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அய்யோ.. உன் முகத்தை கூட பார்க்க முடியலையே தலைவா" - தலையில் அடித்துக்கொண்டு கதறியழும் தொண்டர்கள்.!!
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் மியாட் மருத்துவமனையில் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விஜயகாந்த் மறைவு; தலையில் அடித்துக்கொண்டு ‘அய்யோ’ என கதறி அழும் தொண்டர்கள் #NewsTamil24x7 | #vijayakanth | #Corona | #DMDK | #premalathavijayakanth pic.twitter.com/Roa0Wtkt1Z
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) December 28, 2023
இதனை தொடர்ந்து தனது 71 வயதில் அவர் காலமானார். மேலும் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இல்லத்தில் இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
விஜயகாந்தின் உடலை கண்டு அவரது இல்லத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறியழும் காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. "உன்னுடைய முகத்தை கூட பார்க்க முடியவில்லையே" என கண்ணீர் மல்க கூச்சலிட்டனர்.
விஜயகாந்த் வீட்டு முன்பு கண்ணீருடன் குவிந்த தேமுதிக முக்கிய நிர்வாகிகள்.. pic.twitter.com/67dG2pRKHB
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 28, 2023
Video Thanks: AsianetNews