35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
புத்துயிர் பெறும் தேமுதிக..! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்; உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்
சினிமா துறையில் இருந்து அதிரடியாக அரசியலில் குதித்து மக்களின் செல்வாக்கை விரைவில் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் தொடங்கிய தேமுதிக கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இவருடைய தொண்டர்கள் தீவிரமாக உழைக்க தொடங்கினர். இதன் பயனாக தேமுதிக கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.
சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் மைத்துனர் கையில் சென்று விட்டது. இதனால் தேமுதிகவில் பெரும்பாலான தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் தான் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது அக்கட்சியின் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் தேமுதிக மீண்டும் புத்துயிர் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் மற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய விஜயபிரபகாரன், தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபட போவதாகவும் இளைஞர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பேசிய அவர், "என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் புதிதாக செய்துவிட போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைதான் நானும் செய்யப் போகிறேன். இதற்காக என்னுடன் இளைஞர்களும் இணைந்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
பொறுப்பு தேடி போவது அரசியல் இல்லை. சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நான் நிறைய திட்டங்களையும் வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தவும் போகிறேன். கட்சியில் பொறுப்பேற்பது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.