திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேப்டனை அமெரிக்கா அனுப்பிவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்த சின்ன கேப்டன்! தேமுதிகவினர் உற்சாகம்
சினிமா துறையில் இருந்து அதிரடியாக அரசியலில் குதித்து மக்களின் செல்வாக்கை விரைவில் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் தொடங்கிய தேமுதிக கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இவருடைய தொண்டர்கள் தீவிரமாக உழைக்க தொடங்கினர். இதன் பயனாக தேமுதிக கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.
சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் மைத்துனர் கையில் சென்று விட்டது. இதனால் தேமுதிகவில் பெரும்பாலான தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
தேமுதிக கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக கோயம்பேடு அருகில் இருக்கும் தேமுதிக கட்சி அலுவலகம் இடிக்கப்படபோகிறது என்ற செய்தியும், மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்க சென்றுள்ள செய்தியும் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும் அமெரிக்கா சென்று விட்டதால், கட்சி பணிகளை கையில் எடுக்க துவங்கிவிட்டார் சின்ன கேப்டன் விஜய பிரபாகரன். முதலில் பெற்றோருடன் அவரும் அமெரிக்க செல்ல திட்டமிடப்பட்டதாம். ஆனால் "அனைவரும் சென்றுவிட்டால் கட்சி பணியை யார் செய்வது? நான் இங்கேயே இருந்து கட்சியை கவனித்துகொள்கிறேன். நீங்க அப்பாவ பத்திரமா பாத்துகங்க" என்று கூறி பிரேமலாவை மட்டும் அனுப்பி வைத்துள்ளார் விஜய பிரபாகரன்.
உடல்நலக் குறைவால் விஜயகாந்தால் செய்ய முடயாத பணிகளை களத்தில் இறங்கி செய்யத் துவங்கியுள்ளார் விஜய பிரபாகரன். அவரது செயல்பாடுகளைப் பார்த்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புதிய உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத அவருக்கு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பதவியை கொடுத்துவிடலாம் என அனைவரும் எண்ணும் அளவிற்கு செயல்படத் துவங்கிவிட்டார்.
விஜயகாந்த் மேடையிலும், செய்தியாளர்களிடமும் பேசியதை பலர் கிண்டல் செய்ததை நன்கு உணர்ந்துள்ள விஜய பிரபாகரன், மேடையில் பேசும் போதும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் யோசித்து தெளிவாக பேசும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்.
தேமுதிக-வின் எதிர்காலம் இவர்தான், தேமுதிக மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுந்து வரும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் இருந்து வருகின்றனர். இப்போது நிலவும் பல்வேறு அரசியல் குழப்பங்களை சமாளித்து, பொறுப்புடன் செயல்பட்டு கட்சியை நல்ல நிலைமைக்கு விஜய பிரபாகரன் கொண்டு வந்தால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர் என்பதில் சந்தேகமில்லை.
விஜய பிரபாகரனின் செயல்பாடுகள் குறித்தும், தேமுதிக கட்சியின் எதிர்காலம் குறித்தும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.