திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்தல் நேரத்தில் புதிய ட்விஸ்ட்.! தேமுதிக தலைமையில் புதிய கூட்டணியா? விஜயகாந்த் மகன் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் முக்கிய கட்சியான தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் எந்த அச்சமும் இல்லை என தெறிவித்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டியளித்தது அரசியலை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது எனவும், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.