"ரேஷன் கடைகளில் தக்காளி"..? ஒரே போடா போட்ட விஜய்காந்த்..!



Vijaykanth about tomato price

மிழகத்தில் தக்காளி விலையேற்றம் குறித்து தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கவலை தெரித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால், குடும்ப தலைவிகள் அவதியுற்று வரும் நிலையில், தே.மு.தி.க நிறுவன தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

"தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறி பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சமையலுக்கு மிக அவசியமான தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்வது போன்று, அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.