மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா.? இராமாயணம் படியுங்கள்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சை பேட்டி.!
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தற்போது இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருந்து வருகிறார் . இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் அடிக்கடி அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விமர்சனங்களை ஏற்படுத்துவார். தற்போதும் அதே போன்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தக் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
மகப்பேறு மருத்துவரான இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கர்ப்பிணி பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க ராமாயணம் படிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் இராமாயணம் படித்ததை பார்த்தவதாகவும் அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக குழந்தைகளை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். இவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பல்வேறு ஆன விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.