தன் வினை தன்னை சுடும்னு சும்மாவா சொன்னாங்க?!: விக்கி லீக்ஸால் தலைவலியை சந்தித்த விக்ரமசிங்கே..!



wickramasinghe-has-suffered-a-headache-due-to-wikileaks

இலங்கைக்கு ஜப்பானில் இருந்து வழங்கப்படும் பொருளாதார உதவியை நிறுத்துமாறு 2007 ஆம் ஆண்டு ஜப்பான் அரசிடம் அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய அதிபருமான ரனில் விக்ரமசிங்கே கோரிக்கை வைத்துள்ளார்.

கடும் பொருளாதார வீழ்ச்சியை கண்டு மக்கள் புரட்சி வெடித்ததால் ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகியதுடன் இலங்கையை விட்டு வெளியேறினர். இதனையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கே ஜப்பான் அரசுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு நடத்திய பேச்சுவார்த்தை விவரத்தை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது, 2007 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரனில் விக்ரமசிங்கே, ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியை நிறுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜப்பான் அரசு அளித்த பதிலில், இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு மக்களை புறக்கணிப்பதற்கான தண்டனையை அந்நாட்டு மக்கள் பெறக்கூடாது. எனவே உதவி வழங்குவதை நிறுத்த முடியாது என்று பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.